News September 2, 2025
செம்மணி புதைகுழியில் 209 மனித எலும்புக்கூடுகள்

இலங்கை உள்நாட்டு போரின்போது கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எலும்புக்கூடுகள் செம்மணியில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜூன் முதல் ஆக.1 வரை 209 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்மணி சிந்துப்பாத்தி புதைகுழியில் நடைபெற்ற 3 கட்ட அகழாய்வில் இவை வெளிவந்துள்ளன. இதில் சிறுவர்கள், பெண்களே அதிகம் என்பது சோகத்தின் உச்சம்.
Similar News
News September 2, 2025
புதிய மாநில அமைப்பு செயலாளர்: EPS அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் எம்.வின்சென்டை அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமித்து இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவில் தொகுதியில் இருந்து 1977, 1980 ஆகிய பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற இவர், எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பிடித்தவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், கட்சியினருக்கு சரியான வழிகாட்டுதல் வழங்குவதற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News September 2, 2025
RECIPE: உடல் எடை குறைக்க உதவும் ‘கம்பு தோசை’

◆செரிமானம் மேம்பட, உடல் எடை குறைய, ரத்த சோகை பிரச்னை நீங்க கம்பு தோசை உண்ணலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
➥கம்பை நன்கு கழுவி தனியாக 4 மணி நேரம் ஊற வைக்கவும். அதே போல, உளுந்தம் பருப்பு, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
➥இவற்றை தோசை மாவு பதத்திற்கு அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். இதில் தோசை செய்தால் சுவையான கம்பு தோசை ரெடி. SHARE IT.
News September 2, 2025
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி: CM ஸ்டாலின்

இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளதாக ஜெர்மனியில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என குறிப்பிட்ட அவர், தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி எனவும் கூறியுள்ளார். முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தர, தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்.