News April 25, 2024
SRH அணிக்கு 207 ரன்கள் இலக்கு

SRH அணிக்கு எதிரான போட்டியில் RCB அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய கோலி 51, பட்டிதார் 50 ரன்கள் அடித்தனர். கடைசியில் சிறப்பாக ஆடிய க்ரீன் 37 ரன்கள் விளாசினார். SRH தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டும், நடராஜன் 2 விக்கெட்டும், கம்மின்ஸ், மார்க்கண்டேய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து SRH அணிக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 464 ▶குறள்: தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். ▶பொருள்: களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.
News September 20, 2025
டி20-ல் இந்தியா அரிய சாதனை

சர்வதேச டி20-யில் 250 போட்டிகள் என்ற மைல்கல்லை இந்திய அணி எட்டியுள்ளது. நேற்றைய ஓமன் உடனான போட்டியின் போது இந்திய அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இருப்பினும், அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அணிகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 275 போட்டிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்திலும், 235 போட்டிகளுடன் நியூசிலாந்து 3-ம் இடத்திலும் உள்ளது.
News September 20, 2025
இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஓய்வு

இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகளாக ரயில்களை இயக்கி வந்த சுரேகா யாதவ் ஓய்வு பெற்றுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், 1989-ல் ரயில்வேயில் துணை ஓட்டுநராக பணியை தொடங்கினார். இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர், சரக்கு ரயில், பயணிகள் ரயில்களை இயக்கியுள்ளார். அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்ற நிலையில், வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.