News August 3, 2024
206 பேரை காணவில்லை: பினராயி விஜயன்

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 206 பேரை காணவில்லை என, கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 29ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், பலரது நிலைமை என்னவென்றே தெரியவில்லை. இதையடுத்து ராணுவம், இஸ்ரோ விஞ்ஞானிகள் உதவியுடன் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 7, 2025
பிஹாரில் அதிகபட்சமாக 64.66% வாக்குப்பதிவு

பிஹாரில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளதாக ECI அறிவித்துள்ளது. இதுவரை 62.57% வாக்குப்பதிவே அதிகபட்சமாக இருந்த நிலையில், இன்று 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது. SIR நடவடிக்கை, ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையே இதற்கு காரணம் என தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
News November 7, 2025
விளையாட சென்றவர் பிணமாக திரும்பினார்… சோக மரணம்!

உ.பி., ஜான்சியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞரின் அகால மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த 30 வயது ரவீந்திரா, சம்பவத்தன்று அதிகாலையில் எழுந்து, ‘அப்பா நான் விளையாடப் போறேன்’ சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக சென்றிருக்கிறார். சில ஓவர்கள் பவுலிங் செய்துவிட்டு தாகத்துக்கு தண்ணீர் குடித்தவர், அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இப்படியா முடிவு வரணும்!
News November 7, 2025
ராசி பலன்கள் (07.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


