News March 17, 2024
தென்காசியில் 203 பேர் சிக்கினர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் நேற்று தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 15 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்
Similar News
News January 18, 2026
தென்காசி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 18, 2026
தென்காசி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

சிவகிரி அருகே தேவிப்பட்டணம் நடுவூர் ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் வைவரன் (60). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வேதனையடைந்த அவர் நேற்று தனது வீட்டில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 18, 2026
தென்காசி: பீர் பாட்டிலால் ஓட்டுநரின் மண்டை உடைப்பு

கடையம் அருகே வாசுகி நகர் பகுதியை சேர்ந்தவர் சுவேக் (30). மினி பஸ் டிரைவரான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மது பாரில் மது அருந்த சென்றார். அப்போது கிழ கடையம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (23) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சரவணக்குமார் பீர் பாட்டிலால் சுவேக் தலையில் அடித்ததில், அவரது மண்டை உடைந்து தென்காசி GH-ல் அனுமதிக்கப்பட்டார். கடையம் போலீஸார் சரவணக்குமாரை கைது செய்தனர்.


