News December 7, 2025
2027 WC-ல் Ro-Ko இடம் பெறுவார்களா? கம்பீர் பதில்

2027 WC-ல் Ro-Ko ஜோடி விளையாடுவார்களா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க BCCI முனைவதாக கூறப்படும் சூழலில், கோச் கம்பீரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 2027 WC-க்கு 2 ஆண்டுகள் இருப்பதாக கூறிய அவர், தற்போதைய அணி குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார். மேலும், இளம் வீரர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வதாகவும் கூறினார்.
Similar News
News March 7, 2026
பொதுமக்களை ஈரான் தாக்குகிறது: USA

USA, ஈஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், 12-க்கும் அதிகமான நாடுகளில் வாழும் பொதுமக்களை ஈரான் திட்டமிட்டே தாக்குவதாக USA குற்றஞ்சாட்டியுள்ளது. ஈரானின் பயங்கரவாத படைகள் செய்யும் அட்டூழியத்தை ஏற்க முடியாது என்றும், இந்த தாக்குதல்களுக்கு அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்வார்கள் எனவும் USA கூறியுள்ளது.
News March 7, 2026
SPORTS 360°: பேட்மிண்டனில் லக்ஷயா சென் அபாரம்

*ISL கால்பந்தில் ஜாம்ஷெட்பூர் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியது *மோகன் பகன் சூப்பர் ஜெயண்ட் 5-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பந்தாடியது *PRAGUE செஸ் மாஸ்டர்ஸில் அரவிந்த் சிதம்பரம் 3-வது இடம் பிடித்தார் *வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில், லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்
News March 7, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 630 ▶குறள்:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
▶பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.


