News January 1, 2026
2026-ல் தங்கம் விலை உயருமா? குறையுமா?

தங்கம் விலை கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ₹40,000 அதிகரித்து <<18730018>>₹1 லட்சத்தை<<>> தாண்டி விட்டது. இதுதொடர்பாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், தற்போது புத்தாண்டு விடுமுறை என்பதால், அமெரிக்காவில் மார்க்கெட் பெரிதாக இருக்காது. வரும் வாரங்களில் சூடுபிடிக்கும். தங்கம் விலை என்பது அமெரிக்க வட்டி குறைப்பை பொறுத்தே தீர்மானிக்கப்படும். எனவே 2026-ல் கிராமுக்கு ₹15,000 வரை உயரலாம் என கூறியுள்ளார்.
Similar News
News January 1, 2026
குளிர்காலத்தில் இட்லி மாவு புளிக்க நேரமாகுதா?

இட்லி மாவு புளித்தால் மட்டுமே இட்லி பஞ்சு போல மென்மையாக வரும். ஆனால், குளிர் காலத்தில் இட்லி மாவு விரைவாக புளிக்காது. மாவை புளிக்க வைக்க சில டிப்ஸ் இதோ! * மாவை கைகளால் கலக்கும் போது எளிதாக புளிக்கும் *அரிசி அரைக்கும் போது அதனுடன் அவல் அல்லது வடித்த சாதத்தை சேர்த்து அரைக்கவும் *மாவு அரைக்கும் போது சிறிது சூடான நீரை பயன்படுத்தலாம் *மாவு அரைத்த பிறகு அதில் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கலாம்.
News January 1, 2026
மகளிர் உரிமைத் தொகை.. மாற்றம் செய்தது தமிழக அரசு

மகளிர் உரிமைத் தொகை திட்ட இணையதளத்தில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, தகுதியில்லாத பெண்கள் இந்த திட்டத்தில் ₹1,000 பெற்று வந்தால் புகாரளிக்க <
News January 1, 2026
ஜன.3-ம் தேதி வெளியாகிறது ‘ஜனநாயகன்’ பட டிரெய்லர்

பொங்கலையொட்டி ஜன. 9-ம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் ஆடியோ லாஞ்ச் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், டிரெய்லர் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற ஆவல் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. நியூ இயருக்கு டிரெய்லரை வெளியிட முதலில் திட்டமிட்டு, அது தள்ளிப் போய்விட்டது. இந்நிலையில் டிரெய்லர் ஜன.3-ம் தேதி மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


