News December 25, 2025
2026-ல் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!

2026 தொடக்கத்தில் உள்ள கிரஹ நிலைகள், குரு, ராகு கேது பெயர்ச்சிகளின் அடிப்படையில் ராசி பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேஷம், கடகம், கன்னி, தனுசு, கும்ப ராசியினருக்கு பதவி உயர்வு, பொறுப்புகள் கைகூடி வரும். மிதுன ராசியினர் வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்க வேண்டாம். சிம்ம ராசியினர் திட்டமிட்டு செயல்பட்டால் நல்லது நடக்கும். அலட்சியம் தவிர்த்து அக்கறையுடன் செயல்படுவது அனைவருக்கும் அவசியம்.
Similar News
News January 1, 2026
இனிமேல் மீன் சாப்பிட்டா முள் குத்தாது!

மீன் பிடிக்கும் என்றாலும், பலரும் அதை சாப்பிட யோசிப்பதற்கு காரணம் அதில் இருக்கும் முள்! அதிலும், சீனர்கள் சாப்பிடும் சில மீன் வகைகளில் சுமார் 80 முட்கள் இருக்குமாம். இதனால், முள் இல்லாத மீன்களை பண்ணைகளில் வளர்க்கும் முயற்சியில் 6 ஆண்டுகளாக போராடி வந்த சீன விஞ்ஞானிகள், தற்போது அதில் வெற்றி கண்டுள்ளனர். runx2b என்ற மீன்களின் ஜீன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதனை சாத்தியமாக்கியுள்ளனர்!
News January 1, 2026
அதிமுகவில் 10,175 விருப்ப மனுக்கள் தாக்கல்

சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள், கடந்த டிச.15 முதல் டிச.23 வரையிலும், டிச.28 முதல் டிச.31 வரையிலும் பெறப்பட்டன. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் இருந்து மொத்தமாக 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. இதில், EPS தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 2,187 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
நடிகை நந்தினி மரணம்.. தாய் கண்ணீர் அஞ்சலி

நடிகை நந்தினியின் மரணம் சின்னத்திரை ரசிகர்களை உலுக்கியுள்ளது. குடும்ப அழுத்தமே அவரது சோக முடிவுக்கு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், நந்தினியின் தாய் பசவராஜேஸ்வரி கண்ணீர்மல்க விளக்கம் அளித்துள்ளார். அதில், நந்தினி நடிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, வதந்திகளை பரப்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். மகளின் இறப்பு செய்தியை அறிந்ததும் இதயமே நொறுங்கியது எனவும் வேதனையுடன் அவர் கூறினார்.


