News January 1, 2026
2026-ல் எத்தனை ODI-களில் RO-KO விளையாடுவார்கள்?

2027 ஒருநாள் உலகக் கோப்பையை முன்னிட்டு, இந்திய அணி 2026-ல் 21 ODI போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் ரோகித்-கோலி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். டெஸ்ட், டி20-யில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், இருவரும் இந்தாண்டின் அனைத்து ODI-களிலும் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2025-ல் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் கோலி(651), ரோகித்(650) முதல் இரண்டு இடங்களை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 11, 2026
விஜய் வருகையால் பயத்தில் திமுக: தங்கமணி

சிறுபான்மையினர் வாக்கு தவெகவிற்கு சென்றுவிடுமோ என்ற பயத்தில் திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றும் விவகாரத்தில் கூட திமுக அரசியல் செய்வதாக தங்கமணி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய DMK அரசு தவறிவிட்டது. இதையெல்லாம் மனதில் வைத்து வரும் தேர்தலில் ADMK கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்; தமிழகமும் வளர்ச்சி அடையும் என்றார்.
News February 11, 2026
திமுகவிடம் டிமாண்ட் செய்யும் மமக

2021-ல் இரு முஸ்லிம் கட்சிகளுக்கு 5 தொகுதி ஒதுக்கிய திமுக, அதனை வரும் தேர்தலில் <<19072975>>4 முஸ்லிம் கட்சிகளுக்கு<<>> ( முஸ்லிம் லீக், மமக, SDPI, தமிமுன் அன்சாரி) பகிர்ந்தளிக்க திமுக முடிவெடுத்துள்ளதாம். இது இஸ்லாமிய கட்சிகளை அதிருப்தியடைய செய்துள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டு பெறுவோம் எனக் கூறியுள்ள ஜவாஹிருல்லா, தனிச் சின்னத்தில் போட்டியிட திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 11, தை 28 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


