News January 12, 2026

2026-ன் முதல் மெகா சம்பவம்.. சீறும் PSLV!

image

2026-ம் ஆண்டின் முதல் விண்வெளி ஏவுதல் இன்று நடைபெற உள்ளது. PSLV-C62 ராக்கெட் மூலம் இன்று 16 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதில், ‘EOS-N1 Anvesha’ எனப்படும் DRDO-ல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள், இந்தியாவின் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இது தவிர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 வணிக செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

Similar News

News February 6, 2026

அதிமுகவுடன் கூட்டணி இல்லையா?

image

EPS தலைமையில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சிலர் அதிமுக-தேமுதிக கூட்டணி பற்றி கேட்க, பிரேமலதா 14 தொகுதிகளை கேட்பதாகவும், இதனால் கூட்டணி கணக்கு வேலைக்கு ஆகாது எனவும் EPS வெளிப்படையாகவே கூறியதாக தகவல் கசிந்துள்ளது. எனவே இதனை அறிந்த தேமுதிக தரப்பு தற்போது திமுக அல்லது தவெக ஆகிய இரு ஆப்ஷன்களை மட்டுமே வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

News February 6, 2026

BREAKING: தங்கம் விலை தலைகீழாக மாறியது

image

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ₹1,600 குறைந்து நிம்மதியை கொடுத்த நிலையில், மாலையில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இன்று 2-வது முறையாக மாற்றம் கண்ட தங்கம் விலை, சவரனுக்கு ₹1,040 அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹14,250-க்கும், 1 சவரன் ₹1,14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹5,200 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News February 6, 2026

காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு அங்கம்: செபாஸ் ஷெரீப்

image

காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் என்றும் துணையாக இருக்கும் என பாக்., PM செபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் ஒற்றுமை தினத்தையொட்டி ஆக்கிரமிப்பு காஷ்மீர்(PoK) சட்டமன்றத்தில் பேசிய அவர், காஷ்மீர் பாகிஸ்தானின் ஒர் அங்கமாக மாறும் என்றும் கூறியுள்ளார். காஷ்மீர் பாகிஸ்தானின் ‘கழுத்து நரம்பு’ என்று பாக்., நிறுவனர் முகமது அலி ஜின்னா கூறியதே, தங்கள் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை எனவும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!