News January 1, 2026
2026-ன் முதல் சூரிய உதயம் PHOTOS

2026-ம் ஆண்டின் முதல் சூரிய உதயம் ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கிறது. நாடு முழுவதும் மக்கள் நம்பிக்கையுடனும் நல்வாழ்த்துக்களுடனும் புத்தாண்டை வரவேற்றனர். புதிய ஆண்டின் முதல் சூரிய உதயம் புத்துணர்ச்சியான தொடக்கத்தை ஏற்படுத்தியது. மேலே, இந்தாண்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் எடுக்கப்பட்ட முதல் சூரிய உதயத்தை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
Similar News
News January 6, 2026
திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயம்!

ஓமனில் அடுத்த தலைமுறையை காக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, திருமணம் செய்வதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரத்தசோகை, ஹெபடைட்டீஸ், தலசீமியா உள்ளிட்ட மரபியல் நோய்கள், HIV தொற்றுக்களை முன்கூட்டியே அறியவும், குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கவும் இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது போன்ற ஒரு சட்டத்தை கொண்டு வரலாமா? கமெண்ட் பண்ணுங்க.
News January 6, 2026
அப்பாவின் கண்டிப்பால் விபரீத முடிவெடுத்த மாணவன்

இப்போதுள்ள மாணவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கே மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனில் அதிக நேரம் செலவிட்ட மாணவன், தந்தை திட்டியதால் விபரீத முடிவை எடுத்த சம்பவம் சேலம் எருமாபாளையம் பகுதியில் நடந்துள்ளது. தந்தை அருளின் கண்டிப்பால் மனமுடைந்த 17 வயது மகன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்தது பெரும் சோகம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல என உணருங்கள்!
News January 6, 2026
உத்தர பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்!

உ.பி.,யில் SIR-க்கு பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 46.23 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், 2.17 கோடி பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் ECI தெரிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் தான் அதிக வாக்காளர்கள் (97.37 லட்சம் பேர்) நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உ.பி., முதலிடம் பிடித்துள்ளது.


