News December 16, 2025

2026-ன் முதல் கூட்டத்தொடரில் அறிவிப்புகள் வெளியாகுமா?

image

சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜன.6-ல் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், அது தொடர்பான கோப்புகள் லோக் பவனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கூட்டத் தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News March 29, 2026

தமிழ்நாடே.. தலைப்புச் செய்திக்கு ready-ஆ?

image

இன்னும் சற்று நேரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை CM ஸ்டாலின் வெளியிட உள்ளார். அதற்கு ஹைப் ஏத்தும் விதமாக தமிழ்நாடே தலைப்புச் செய்திக்கு ready-ஆ? என தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 29, 2026

₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு UPDATE

image

ஆட்சி மாறினால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படுமா என மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மகளிருக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டம் என்ற பெயரில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான விதிமுறைகள் குறித்து அதிமுக தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. SHARE

News March 29, 2026

₹10 கோடி கிடைத்தும் நேர்மையை கைவிடாத பெண்

image

வங்கி கணக்கில் தவறுதலாக ₹1,000 வரவு வைக்கப்பட்டாலே அதை யாரும் திருப்பி தர மாட்டார்கள். ஆனால் உ.பி.,யை சேர்ந்த ரீட்டா என்ற பெண்மணியோ இதற்கு மாறாக தனது நேர்மையை வெளிபடுத்தியுள்ளார். அவரது வங்கி கணக்கில் தவறுதலாக ₹9,99,49,588 வரவு வைக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு ரூபாய் கூட தொடாமல், இதுகுறித்து வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது நேர்மைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!