News December 31, 2025
2026-ன் ஆச்சரிய அதிசயம்.. இத கவனிச்சீங்களா!

நாளை புது வருடம் பிறக்கிறது. 01/01/2026 தேதியில் 1/1/1 Pattern உருவாகிறது. 2026-ஐ கூட்டினால் 2+0+2+6= 10, அதை மீண்டும் கூட்டினால் 1 வரும். இந்த Pattern கடைசியாக, 01/01/2017-ல் உருவானது. 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் இந்த அதிசய 2026 ஆண்டு மகிழ்ச்சியும், நன்மைகளும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என Manifest செய்து, இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.
Similar News
News January 2, 2026
டிகிரி போதும்.. வங்கியில் ₹65,000 சம்பளம்!

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✦கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ✦வயது: 25- 40 ✦தேர்ச்சி முறை: Online Test, Personal Interview ✦விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5-ம் தேதி ✦ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News January 2, 2026
போதைப்பொருள் Network-ஐ ஒழிக்க வேண்டும்: CM

<<18739557>>திருச்சியில்<<>> பேசிய CM ஸ்டாலின், போதையில் இருந்து இளைஞர்களை மீட்க பெற்றோரும், சமூகமும் பொறுப்போடு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மிகப்பெரிய போதைப்பொருள் நெட்வொர்க்கை ஒழிக்க மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், நாட்டின் எல்லைக்குள் போதைப்பொருள் நுழைவதை மத்திய அரசின் முகமைகள் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News January 2, 2026
பான் கறைகளை ஒழிக்க நூதன டெக்னிக்!

ரோட்டில் கால் வைக்கவே கூசும் அளவிற்கு, பெரிய பிரச்னையாகவே மாறிவிட்டது பான் கறைகள். இதற்கு ஒரு நூதனமான தீர்வை ஹைதராபாத்தில் கண்டுபிடித்துள்ளார்கள். மூட்டைப்பூச்சியை கொல்லும் நவீன மெஷினை போல எச்சில், பானை துப்ப, ஆங்காங்கே ஒரு டப்பாவை வைத்துள்ளனர். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில், பான் பிரியர்களை கன்ட்ரோல் பண்ண இது பத்தாது எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?


