News January 1, 2026

2026ல் உங்களுக்கு நீங்க சொல்ல நினைக்கும் Advice என்ன?

image

புத்தாண்டு தொடங்கிவிட்டது. பல புதிய கனவுகள் இருக்கும். பல புது முயற்சிகள் மேற்கொள்ள திட்டம் போட்டிருப்பீர்கள். இந்த ஆண்டில் பல விஷயங்களை செய்து முடித்திட வேண்டும் என பலர் பல Resolution-ம் எடுத்திருப்பீர்கள். இந்த ஆண்டில் நான் இதை நிச்சயமாக தவிர்த்து விட வேண்டும் என உங்களுக்கே உங்களுக்கு நீங்களே ஒரு Advice கொடுக்க விரும்பினால் என்ன சொல்வீர்கள்? கமெண்ட்டில் சொல்லுங்க….

Similar News

News February 6, 2026

தூய வெள்ளியை அடையாளம் காண்பது எப்படி?

image

*தூய வெள்ளி காந்தத்தில் ஒட்டாது. *அதன் மீது ஒரு பனிக்கட்டியை வைத்தால், அது உடனடியாக உருகத் தொடங்கும். *வெள்ளிக்கு எவ்வித மணமும் இல்லை. *ஒரு வெள்ளிப் பொருளை சுத்தமான வெள்ளை துணியால் தேய்த்தால், அதில் கருப்பு அல்லது சாம்பல் புள்ளிகள் தோன்றும். *போலி வெள்ளி தண்ணீர் வேகமாக மூழ்கும். *வெள்ளியை மெதுவாக தட்டினாலே, அதிலிருந்து தெளிவான மணி ஓசை எழும்.

News February 6, 2026

அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

காவலாளி அஜித் குமார் மரண வழக்கு மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமாரை விசாரிக்க டிஎஸ்பிக்கு உயரதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யார் அந்த உயரதிகாரி என கேள்வி எழுப்பிய அஜித் குமார் தரப்பு வழக்கறிஞர், கணேஷ் குமார், பொய்யாக புகார் அளித்த நிகிதா, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News February 6, 2026

UPI பேமெண்ட்டில் வரும் அதிரடி மாற்றங்கள்

image

நமது அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாக மாறியுள்ள UPI பேமெண்ட் முறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக, நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் செயலற்ற ஐடிக்களை முடக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், கடினமான நடைமுறையாக இருந்த Autopay Cancellation எளிமையாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி பரிவர்த்தனைகள் 10 விநாடிகளுக்குள் முடிந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!