News December 31, 2025
2025 REWIND: உங்களின் மனம் கவர்ந்த ஜோடி யார்?

2025-ன் கடைசி நாளில் இருக்கிறோம். இந்த ஆண்டில், நம்முடைய மனம் கவர்ந்த பல சினிமா நட்சத்திரங்கள் திருமணம் செய்து புதுமண தம்பதிகளாக மாறியுள்ளனர். அவர்களது லிஸ்ட்டை உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து யார் யார் என பாருங்க. இவர்களில் உங்களின் மனம் கவர்ந்து ஜோடி யார்னு கமெண்ட்ல சொல்லுங்க?
Similar News
News January 7, 2026
எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அன்பில் மகேஸ்

TN மாணவர்களுக்கு என்ன தேவை என்பது TN அரசுக்கு தான் தெரியும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் TN-ல் தான் மாநில கல்விக் கொள்கை (TNSEP) உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டெல்லியில் இருந்துகொண்டு உத்தரவு போட்டால், எப்படி நம் பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதற்காகவே TNSEP என்றும் அவர் குறிப்பிட்டார்.
News January 7, 2026
EB பிரச்னையா? இங்கே புகாரளித்தால் உடனடி தீர்வு!

உங்கள் பகுதியில் Transformer வெடிச்சிடுச்சா? கம்பம் விழுந்துருச்சா? மின் கட்டணம் அதிகமா காட்டுதா? கவலைய விடுங்க. மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களுக்கும், தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம். அப்படி இல்லையெனில் இதற்காகவே TNEB Mobile App செயலி இருக்கிறது. இதில் புகாரளிக்கும் பட்சத்தில் உடனடியாக பிரச்னைகள் சரிசெய்து தரப்படும். SHARE.
News January 7, 2026
விஜய்யை சந்தித்தது உண்மைதான்: பிரவீன்

ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்ததாக தகவல் வெளியானது. தமிழக அரசின் கடனை உ.பி.,யுடன் அவர் ஒப்பிட்டு பேசியதும் திமுக – காங்., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஜய்யை சந்தித்தது உண்மை தான், ஆனால் என்ன பேசப்பட்டது என்பது பற்றி சொல்ல முடியாது என பிரவீன் கூறியுள்ளார். மேலும், கடன் விவகாரம் பற்றி ஒப்பிட்டதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


