News December 28, 2025
2025 REWIND: இந்தியர்களின் டாப் 5 பெஸ்ட் T20I பவுலிங்!

2025 இந்தியாவிற்கு T20I-ல் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. மொத்தமாக 21 போட்டிகளில் விளையாடி, அதில் 15 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி நடைக்கு வழிவகுத்த இந்திய வீரர்களின் டாப் 5 பவுலிங் லிஸ்ட்டை மேலே குறிப்பிட்டுள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து யார் முதல் இடத்தில் உள்ளார் என்பதை பாருங்க. இந்த லிஸ்ட்டில் வேறெந்த வீரரின் சிறப்பான ஆட்டத்தை சேர்க்கலாம்?
Similar News
News January 1, 2026
புத்தாண்டில் பிறந்த பீம் பாய்!

தாயின் 4 மணி நேர பிரசவ வலியின் முடிவில், பேரானந்தமாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் ரூபாவதி (26) என்பவருக்கு சுமார் 4.8 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்துள்ளது. குழந்தையை கண்ட பலரும் ‘பீம் பாய் பொறந்துட்டான்’ என பூரித்து போயுள்ளனர். பொதுவாக சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் 3.1 கிலோ வரை இருக்கும். புத்தாண்டில் இந்த உயிரின் வருகையை உறவினர்கள் கொண்டாடி வருகின்றனர்.
News January 1, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. முதல் நாளே வந்த அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், இம்மாதம் ரேஷன் பொருள்கள் வீடு தேதி வரும் தேதி வெளியாகியுள்ளது. ஆம்! ஜன.4, 5-ல் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதை முதல் மாவட்டமாக திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 1, 2026
முட்டைகோஸால் மரணமா?

உபி.,யில் தீராத தலைவலியால் அவதியுற்று வந்த 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். அவருக்கு MRI ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் 8 கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆபரேஷன் செய்தபோது பலியாகியுள்ளார். இதுகுறித்து சிகிச்சை அளித்த டாக்டர்கள், மாணவி சாப்பிட்ட உணவு வழியே முட்டைக்கோஸில் காணப்படும் ஒருவகையான ஒட்டுண்ணி மூளைக்குள் நுழைந்து, இந்த கட்டிகள் ஏற்பட்டிருக்கலாம் என்று விளக்கமளித்துள்ளனர்.


