News August 8, 2025
2025 Ballon d’Or: மெஸ்ஸி, ரொனால்டோ மிஸ்ஸிங்!

2025 Ballon d’Or விருதுக்கான பரிந்துரை பட்டியலில், ஃபுட்பால் உலகின் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோவின் பெயர்கள் இடம்பெறாதது அவர்களது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடப்பாண்டுக்கான பரிந்துரை பட்டியலில் பிஎஸ்ஜி கிளப் அணியைச் சேர்ந்த 9 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சிறந்த ஃபுட்பால் வீரருக்கான இந்த உயரிய விருதை மெஸ்ஸி 8 முறையும், ரொனால்டோ 5 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 8, 2025
ரோந்து போலீசார் 2 பேருடன் செல்க: அண்ணாமலை

உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற அளவில் போலீசார் ரோந்து செல்வதாக SI சண்முகவேல் கொலையை சுட்டிக்காட்டி அண்ணாமலை விமர்சித்துள்ளார். இரவு ரோந்து போலீசார் தனியாக செல்லாமல் 2 பேருடன் செல்ல வேண்டும் எனவும், உடையில் கேமரா உள்ளிட்ட நவீன உபகரணங்கள் போலீசாருக்கு வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றங்களுக்கு காரணமான மது, போதை பழக்கங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
News August 8, 2025
செங்கோட்டையில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் PM மோடி தேசிய கொடி ஏற்றி, மக்களிடையே உரையாற்ற உள்ளார். இதனால், டெல்லி முழுவதும் 10,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரோன் எதிர்ப்பு அமைப்பு, Facial Recognition Technology பயன்படுத்தப்பட உள்ளது. வரும் 16ம் தேதி வரை டிரோன்கள், பலூன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
ஆகஸ்ட் 8: வரலாற்றில் இன்று

* 1509 – விஜயநகரப் பேரரசராக கிருஷ்ணதேவராயர் முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. *1942 – இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. *1947 – பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது. *2014 – ஆப்பிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல் தொடர்பாக பொதுநல அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டது.