News December 22, 2025

2025-ல் மறக்க முடியாத நிகழ்வுகள் PHOTOS

image

2025-ம் ஆண்டில் இந்தியாவில் மறக்கமுடியாத ஏராளமான விஷயங்கள் நடந்தது. அரசியல், விளையாட்டு, கொண்டாட்டம், துயரம் என பல்வேறு நிகழ்வுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவை என்னவென்று தெரியுமா? எந்த மாதம் என்ன நடந்தது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 23, 2025

மத்திய அமைச்சருக்கு CM ஸ்டாலின் கடிதம்

image

TN மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என CM ஸ்டாலின், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த <<18646512>>12 மீனவர்கள்<<>> இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதை சுட்டிக்காட்டியுள்ள CM, இதுவரை சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News December 23, 2025

ஒரே ஓவரில் 5 விக்கெட் எடுத்து உலக சாதனை!

image

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தோனேசிய வீரர் கெடே பிரியந்தனா(28) சாதனை படைத்துள்ளார். பாலியில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் 168 இலக்கை நோக்கி விளையாடிய கம்போடியா அணி 15 ஓவர்களில் 106-5 என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் 16வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் பிரியந்தனா, ஒரே ஓவரில் மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் (WWW0WW) கைப்பற்றி அசத்தினார்.

News December 23, 2025

புதுச்சேரியில் உதவித் தொகை அதிகரிப்பு.. CM அறிவிப்பு

image

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை மேலும் ₹1,000 உயர்த்தி CM ரங்கசாமி அறிவித்துள்ளார். அதாவது, வழக்கமாக ₹4,700 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ₹5,700 வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரேஷனில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரிசி 20 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ₹1,500 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!