News December 29, 2025

2025-ல் கிங் கோலி படைத்த சாதனைகள்!

image

இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி வழக்கம் போல, இந்த ஆண்டும் பல ரெக்கார்டுகளை படைத்துள்ளார் ✦அதிவேகமாக 14,000 ODI ரன்களை கடந்த வீரர் ✦ICC Knock-out போட்டிகளில் 1,000 ரன்களை விளாசிய ஒரே வீரர் ✦சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பார்மட்டில் அதிக சதம் அடித்த வீரர் (ODI-ல் 52 சதங்கள்) போன்ற பல சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்காக RCB ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Similar News

News February 7, 2026

அப்பா இஞ்சின் தான் டப்பா இஞ்சின்: தமிழிசை

image

திமுகவுக்கு ஜீரோவுக்கு கீழே மார்க் இருந்தால் தரலாம் என தமிழிசை கூறியுள்ளார். தங்களை டப்பா இஞ்சின் என கூறுவதற்கு பதிலளித்த அவர், அப்பா இஞ்சின்தான் டப்பா அரசாங்கமாக இருக்கிறது என கூறியுள்ளார். மேலும், பேட்டரியே இல்லாத எஞ்சின் காங்கிரஸ்தான் எனவும், வெற்றியே பெறாத காங்கிரஸ், வீக்கான பேட்டரி கொண்ட டார்ச் லைட்டையெல்லாம் வைத்துக்கொண்டு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் எனவும் கிண்டல் செய்திருக்கிறார்.

News February 7, 2026

திமுகதான் குழு அமைக்கல: கார்த்தி சிதம்பரம்

image

திமுக – காங்., தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியுடன் கனிமொழி பேசி 6 நாள்கள் ஆன பின்னும் இன்னும் திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தங்கள் பக்கம் குழு தயாராக இருப்பதாக கூறிய அவர், குழு அமைக்காமல் திமுகவே தாமதிக்கிறது என்றார். முன்னதாக, தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தை குழு பேசும் என கனிமொழி கூறியிருந்தார்.

News February 7, 2026

ஆயுளை நீட்டிக்கும் அவரைக்காயின் குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤அவரைக்காயில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது ➤அவரை விதைகளை வேக வைத்து சாப்பிட்டால், வாயு தொல்லை நீங்குவதோடு வயிற்று புண்ணையும் ஆற்றும் ➤அவரைக்காயில் உள்ள கால்சியம் எலும்புகள் & பற்களுக்கு வலு சேர்க்கிறது ➤நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை & கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துகிறது.

error: Content is protected !!