News January 1, 2026
2025-ல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினங்கள்

பூமியில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் சில வகைகள், இன்றும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. அந்த வகையில், 2025-ம் ஆண்டு, உலகெங்கிலும் பல புதிய உயிரினங்கள் அறிவிக்கப்பட்டன. இது உயிரியல் ஆராய்ச்சியில் மிக முக்கியமான முன்னேற்றமாகும். அவை என்னென்ன உயிரினங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
Similar News
News February 6, 2026
FLASH: தூக்கத்தை கெடுத்த நள்ளிரவு நிலநடுக்கம்

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. மங்கன், நாம்சி, காங்டோக், யால்சிங் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் முதல் அதிகாலை வரை அடுத்தடுத்து 7 முறை(ரிக்டர் அளவில் 4) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
News February 6, 2026
’ஜன நாயகன்’ படத்துக்காக வெயிட்டிங்: தமிழிசை

‘ஜன நாயகன்’ படம் வராமல் இருப்பதற்கும் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தமிழிசை கூறியுள்ளார். 2 வருடம் படம் எடுத்துவிட்டு, 30 நாள்களுக்குள் அனுமதி கிடைக்கவேண்டும் என கேட்பதாக கூறிய அவர், கோர்ட்டுக்கு செல்லாமல் சென்சார் போர்டு சுட்டிக்காட்டிய தவறுகளை அவர்கள் நிவர்த்தி செய்திருக்கலாம் என்றார். மேலும், நாங்களும் ஜன நாயகன் எப்போது வரும், பார்க்கலாம் என்றுதான் காத்திருக்கிறோம் என பேசியுள்ளார்.
News February 6, 2026
திமுகவில் இணைந்தார்.. விஜயபாஸ்கர் அதிர்ச்சி

கரூர் மாவட்ட அதிமுக மருத்துவ அணிச் செயலாளர் Dr.தர்மேந்திரன், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டார். இது, MR விஜயபாஸ்கர் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும் தேர்தலில் கரூர் தொகுதியை கைப்பற்ற விஜயபாஸ்கரும், தக்க வைக்க செந்தில் பாலாஜியும் கடுமையாக உழைத்து வருகின்றனர். கடந்த சில நாள்களாக இரு தரப்பும் மாறி மாறி நிர்வாகிகளை தங்கள் வசம் இழுத்து வருவதால் களம் சூடுபிடித்துள்ளது.


