News November 1, 2025
2025 கூட்ட நெரிசல் மரணங்கள்!

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் காசிபக்கா வெங்கடேஸ்வரர் கோயில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். செப்டம்பர் மாதம் கரூரில் பெரும் துயரம் ஏற்பட்டது. இதேபோன்று 2025-ம் ஆண்டில் இந்தியாவில், இதுவரை பல்வேறு பொது இடங்களில் கூட்ட நெரிசலால் ஏராளமான துயரமான சம்பங்கள் நிகழ்ந்துள்ளன. அவை என்ன நிகழ்வுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க.
Similar News
News November 1, 2025
ஆந்திரா கோயில் கூட்டநெரிசல்: மாறிமாறி குற்றச்சாட்டு

ஆந்திரா <<18168110>>கோயில் கூட்டநெரிசலுக்கு<<>> காரணமான ஏகாதசி நிகழ்ச்சி குறித்து, கோயில் நிர்வாகம் போலீஸ், உள்ளூர் அதிகாரிகளிடம் கூறவில்லை என அம்மாநில CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்து இருந்தால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இது நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக அம்மாநில EX CM ஜெகன் மோகன் சாடியுள்ளார்.
News November 1, 2025
இந்தியாவின் பாகுபலி கவுன்டவுன் தொடங்கியது

இஸ்ரோவின் பாகுபலி என வர்ணிக்கப்படும் CMS-03 செயற்கைக்கோளுக்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. நாளை மாலை 5:26-க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. கடற்படை, ராணுவ பணிகளுக்காக இந்த இது பயன்படுத்தப்பட உள்ளது. 4,410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், ₹1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிறநாடுகளின் துணை இல்லாமல், அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுவது இதுவே முதல்முறை.
News November 1, 2025
‘பெண்ணை கர்ப்பமாக்கினால் ₹25 லட்சம்’

தலைப்பை பார்த்ததும் ஆச்சரியமாகவும் சற்று சபலமாகவும் இருக்கிறதல்லவா? ஆன்லைனில் வந்த இந்த செய்தியால் பணம் கிடைக்கவில்லை. மாறாக ₹11 லட்சத்தை பறிகொடுத்திருக்கிறார் புனேவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர். இந்த மோசடி தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில், போலீஸ் விசாரித்து வருகின்றனர். 2022 முதல் இத்தகைய மோசடிகள் அரங்கேறி வருவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது. உஷார்!


