News December 5, 2024
2024ல் இந்திய வரலாற்றை செதுக்கிய பெண்கள்

ஒரே ஒலிம்பிக்ஸில் 2 பிரிவுகளில் பதக்கம் வென்ற முதல் பெண் வீராங்கனை ஆனார் மனு பாக்கர். பாரா ஒலிம்பிக்ஸில் 2 தங்கங்களை வென்ற முதல் வீராங்கனை அவனி லெகரா. ஃபேஷன் டிசைனரான நான்சி தியாகி, Cannes திரைப்பட விழாவில் அறிமுகமானதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றார். போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெயரை மோகனா சிங் பெற்றார். ராணுவ ஹாஸ்பிடலில் முதல் பெண் இயக்குனராக சக்சேனா நாயர் நியமிக்கப்பட்டார்.
Similar News
News August 5, 2025
சற்றுமுன்: மூன்று பெண் குழந்தைகள் கொடூர கொலை

தமிழகத்தை அதிரவைக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மூன்று கொலைகள் கொடூரமாக அரங்கேறியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வீடு கட்ட வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், மனைவி & மகனை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு, 9, 7, 3 வயதுடைய மூன்று மகள்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின், தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
News August 5, 2025
அமளி நீடித்தால் விவாதமே கிடையாது: கிரண் ரிஜிஜூ

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எதிர்க்கட்சிகள், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி, நாடாளுமன்றத்தை முடக்கின. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்துள்ளார்.
News August 5, 2025
கேப்டன் கில்.. எவ்வளோ மார்க் கொடுப்பீங்க?

ENG டெஸ்ட் தொடர் நடந்து முடிந்து விட்ட நிலையில், இதில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சீனியர்களால் பாராட்டப்பட்டு வருகிறார். 3 முறை 100+ ரன்கள், ஒரு 250+ ரன்கள் என ரன்குவிப்பில் அடுத்தடுத்து பல ரெக்கார்டுகளை முறியடித்த கில், கேப்டனாகவும் களத்தில் ஆக்ரோஷமாகவே செயல்பட்டார். ENG தொடரில் அவரின் பெர்பார்மென்ஸை நீங்க எப்படி பார்க்கிறீங்க?