News March 20, 2024
2024 ஐபிஎல் அணிகளின் ஜெர்சி

2024 ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சிகளை அனைத்து அணிகளும் வெளியிட்டுள்ளன. மார்ச் 22 தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதி வரை முதற்கட்ட போட்டிகள் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளன. வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இன்னும் 2 நாட்களே உள்ளதால், ஐபிஎல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
Similar News
News January 12, 2026
OFFICIAL: ‘பராசக்தி’ வசூல் இவ்வளவு கோடியா..!

‘ஜன நாயகன்’ வெளியாகாததால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான SK-வின் ’பராசக்தி’ 2 நாளில் ₹51 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்த நிலையிலும், முதல் நாளில் ₹27+ கோடி, 2-வது நாளில் ₹24+ கோடி வசூல் செய்துள்ளது. பொங்கலுக்கு தொடர் விடுமுறை வருவதால், இப்படம் ₹100 கோடியை கடக்கும் என திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
News January 12, 2026
அண்ணாமலை பாஜகவில் ஜீரோ தான்: ஆதித்யா தாக்கரே

தேர்தலில் தோற்று டெபாசிட் கூட வாங்க முடியாத <<18833393>>அண்ணாமலை<<>>, மும்பையை பற்றி எங்களுக்குச் சொல்கிறாரா என சிவசேனா (UBT) கட்சியின் MLA ஆதித்ய தாக்கரே விமர்சித்துள்ளார். மேலும், அண்ணாமலை பாஜகவில் கிட்டத்தட்ட ஜீரோ தான். ஆனால் அவர் அடுத்த PM போல நடந்துகொள்கிறார் என்றும், மகாராஷ்டிராவை அவமதித்த அண்ணாமலை மற்றும் பாஜகவை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
கோல்டன் குளோப்ஸ்: ₹9 கோடிக்கு Gift Bag!

கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் கலந்து கொள்ளும் தொகுப்பாளர்கள், வெற்றியாளர்களுக்கு கிஃப்ட் பேக் வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை கோல்டன் குளோப்ஸ் வரலாற்றிலேயே மிகவும் விலை உயர்ந்த, சுமார் ₹9 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட கிஃப்ட் பேக் வழங்கப்பட்டுள்ளது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச பயண வவுச்சர்கள், அரிய வகை ஒயின்கள், விலையுயர்ந்த சரும பாதுகாப்பு பொருள்கள் இடம்பெற்றுள்ளன.


