News January 13, 2025
2024-ம் ஆண்டில் 62 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் 62 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குழந்தை திருமணங்கள் நடத்தியது தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குழந்தை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ஏற்படும் உடல் நல மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
Similar News
News September 23, 2025
தர்மபுரி விவசாயிகளுக்கு இலவச பயிற்சி!

தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு நாளை (செப். 24) பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கரும்பு, தென்னை சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தப் பயிற்சியில், பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள் இதில் பங்கேற்றுப் பயனடைய வேளாண் திட்ட இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர்
News September 23, 2025
தர்மபுரி புத்தகப் பேரவை விழிப்புணர்வு வாகனம்

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-வது புத்தகத் திருவிழா, தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்சியர் ரெ.சதீஸ், பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உடனிருந்தார்.
News September 23, 2025
கரும்பு தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி அறிவிப்பு

தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகின்ற 24.09.2025 புதன் கிழமை அன்று காலை 10 மணி அளவில் விவசாயிகளுக்கு கரும்பு மற்றும் தென்னை சாகுபடியில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. ஆகையால் விவசாயிகள் அனைவரும் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற வேளாண் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.