News December 5, 2024

2024ல் இந்திய வரலாற்றை செதுக்கிய பெண்கள்

image

ஒரே ஒலிம்பிக்ஸில் 2 பிரிவுகளில் பதக்கம் வென்ற முதல் பெண் வீராங்கனை ஆனார் மனு பாக்கர். பாரா ஒலிம்பிக்ஸில் 2 தங்கங்களை வென்ற முதல் வீராங்கனை அவனி லெகரா. ஃபேஷன் டிசைனரான நான்சி தியாகி, Cannes திரைப்பட விழாவில் அறிமுகமானதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றார். போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெயரை மோகனா சிங் பெற்றார். ராணுவ ஹாஸ்பிடலில் முதல் பெண் இயக்குனராக சக்‌சேனா நாயர் நியமிக்கப்பட்டார்.

Similar News

News October 26, 2025

BREAKING: வேகமெடுக்கும் புயல்.. 11 மாவட்டங்களில் கனமழை!

image

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(அக்.27) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. <<18108169>>மொன்தா புயல் இன்று<<>> மாலையே உருவாகும் என ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

News October 26, 2025

பெண்கள் வளர்ச்சியில் தமிழகம் டாப்: தங்கம் தென்னரசு

image

நேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ₹11 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை தங்கம் தென்னரசு வழங்கினார். அதன்பின் பேசிய அவர், மகளிர் சுய உதவிக்குழுக்களால் பெண்களின் பொருளாதாரம் உயர்வதோடு, சமூக மாற்றமும் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணியாற்றும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சமூக முன்னேற்றத்திலும் மிக உயர்ந்த நிலையில், தமிழகம் இருப்பதற்கும் பெண்கள்தான் காரணம் என்றார்.

News October 26, 2025

EB கட்டணம் குறைகிறது.. இதை செக் பண்ணுங்க

image

வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதற்காக ₹30,000 முதல் ₹78,000 வரை மானியம் வழங்குகிறது PM சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டம். இதன்படி, உங்க வீட்டில் 4 கிலோவாட் சோலார் பேனல்களை அமைத்தால், ₹2,00,000 வரை செலவாகும். இதில் ₹78,000 வரை அரசு மானியமாக தருகிறது. ஆன் கிரிட் சோலார் பேனல் வகைக்கு மட்டுமே இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் SHARE THIS.

error: Content is protected !!