News February 24, 2026
2021-ல் 20 சீட்.. 2026-ல் எத்தனை? விரைவில் பேச்சுவார்த்தை

அதிமுக – பாஜக இடையே பிப்.26-ல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் தமிழகத்திற்கு வரும் பாஜக மாநில தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் முன்னிலையில் இப்பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், உடன்பாடு ஏற்பட்டால் அன்றே அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 சீட்களை பெற்ற பாஜக 4 இடங்களில் வென்றது.
Similar News
News February 25, 2026
மாமனார் படுகொலையிலும் பாதை மாறாத நல்லகண்ணு

1990-சாதிய கலவரங்களால் தென் மாவட்டங்களில் பதற்றம் நிலவிய காலகட்டம். அப்போதுதான் நல்லகண்ணுவின் மாமனார் அன்னச்சாமி தேவர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு பழிக்குப்பழியாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக நல்லகண்ணு யார் மீதும் குற்றஞ்சாட்டவில்லை. மேலும் மாமனார் இறப்புக்கு அரசு அளித்த இழப்பீட்டு தொகையையும், வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி செலவுக்காக அளித்தார்.
News February 25, 2026
நல்லகண்ணு மறைவு நாட்டிற்கு பேரிழப்பு: விஜய்

மக்களின் உரிமைகளுக்காக தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் நல்லகண்ணு காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்ததாக விஜய் தெரிவித்துள்ளார். அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதாக விஜய் பதிவிட்டுள்ளார்.
News February 25, 2026
வாஷிங்டன் சுந்தர் என்ன கைலாஷ் ஜீவன் மருந்தா?

டி20 WC-ல் சூப்பர் 8 சுற்றில் SA-வுக்கு எதிரான தோல்வியால் இந்தியா நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் அப்போட்டியில் அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை களமிறக்கியதை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார். முன்பு உடலில் எங்கு வலி என்றாலும் கைலாஷ் ஜீவன் மருந்தை எடுப்பார்கள். அதேபோல் பேட்டிங், பவுலிங் என எதில் பிரச்னை என்றாலும் சுந்தரைத்தான் கம்பீர் தீர்வாக பார்ப்பதாக கூறியுள்ளார்.


