News May 2, 2024
ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த SRH, அதிரடியாக விளையாடியது. டிராவிஸ் ஹெட் 58, நிதிஷ் குமார் 76, க்ளாசென் 42 ரன்கள் குவித்ததால் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை SRH குவித்தது. RR தரப்பில் ஆவேஷ் கான் 2, சந்தீப் ஷர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
Similar News
News January 29, 2026
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News January 29, 2026
விமான கண்ணாடிகள் வட்டமாக இருப்பது ஏன் தெரியுமா?

விமான கண்ணாடிகள் சதுரமாக இல்லாமல் நீள்வட்ட வடிவில் இருப்பது ஏன் என யோசித்ததுண்டா? சுமார் 32,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது காற்றழுத்தம் அதிகமாக இருக்கும். சதுர வடிவ ஜன்னல்களால் இந்த அழுத்தத்தை தாங்க இயலாது. கண்ணாடிகள் உடைந்து உயிர்சேதம் ஏற்படலாம். இதனால்தான், அழுத்தம் சமமாக படரும் வகையில் கண்ணாடிகள் நீள்வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE THIS.
News January 29, 2026
அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பணிகள் தீவிரமாகியுள்ள நிலையில், முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பார்வைச் சவால் கொண்ட மாணவர்களுக்கான எழுத்தர் (Scriber) பணிக்கு B.Ed., தொழிற்கல்வி, பட்டப்படிப்பு பயிலும் 2-ம் ஆண்டு மாணவர்கள், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் தன்னார்வலர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


