News November 20, 2024

2019: ஜார்கண்ட் தேர்தலில் நடந்தது என்ன?

image

ஜார்கண்டில் 2019 தேர்தலில் ஜேஎம்எம் 30, பாஜக 25, காங்கிரஸ் 16இல் வெற்றி பெற்றன. அப்போது India Today, Axis My India Exit pollஇல் UPA 43, பாஜக 27 இல் வெற்றி பெறும் எனவும், ABP VOTER Exit pollஇல் UPA 35, பாஜக 32 என்றும், Times Now Exit pollஇல் UPA 44, பாஜக 28இல் வெல்லும் எனக் கூறப்பட்டிருந்தது. அனைத்து Exit polls கணிப்புகளும் சரியாக இருந்தன. இன்றைய Exit polls தெரிந்து கொள்ள Way2news பாருங்க.

Similar News

News August 20, 2025

திருமா கருத்துக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு

image

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாகக் கூடாது என்ற திருமாவளவன் கருத்துக்கு கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியாக இருப்பதால் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை ஆதரிப்பது தவறு என்றும், தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் ஆக்கக் கூடாது என்று சொல்வது அதிமேதாவித்தனம், அற்பத்தனம், அரைவேக்காடு தனம், கொத்தடிமையிலும் கொத்தடிமைத்தனம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News August 20, 2025

கமலுக்கு ஓகே, ரஜினிக்கு முடியாது: AR முருகதாஸ்

image

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘கூலி’ படம் பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டி வருகிறது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய AR முருகதாஸ், ரசிகர்கள் சில எதிர்பார்ப்புகளுடன் உள்ளதாக கூறினார். ரஜினிக்கான மாஸ் குறையாமல், லோகேஷ் திரைக்கதையில் படம் வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். லோகேஷின் திரைக்கதையை கமலுக்கு ஃபிட் செய்யலாம், ஆனால் ரஜினிக்கு அதைச் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

News August 20, 2025

குமரியில் இன்று உள்ளூர் விடுமுறை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு இன்று (ஆக.20) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த நாளையொட்டி திருவட்டார், விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம் ஆகிய வட்டங்களுக்கு விடுமுறை என கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில், செப். 13-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!