News January 29, 2026
2015-ல் வந்தது செயற்கை வெள்ளம்: CM ஸ்டாலின்

சென்னை பெருநகரில், ₹6,495 கோடியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் சென்னையில் 2015-ல் செயற்கை வெள்ளம் உருவாக்கப்பட்டதாக கூறிய அவர், தற்போது இயற்கை எவ்வளவு மழை தந்தாலும் சமாளிக்கும் ஆற்றலை சென்னைக்கு உருவாக்கி உள்ளோம் என்றார். மேலும், மக்களின் தேவையை புரிந்துகொண்டு மெட்ரோ வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது திமுக அரசுதான் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 12, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது!

தங்கம் விலை இன்று(பிப்.12) சவரனுக்கு ₹1,520 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹190 குறைந்து ₹14,600-க்கும், சவரன் ₹1,16,800-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் காலையில் சற்று உயர்ந்த தங்கம் தற்போது சரிவை நோக்கிச் செல்வதால் இந்திய சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 12, 2026
ஆதாருக்கு முன் இதான் இந்தியர்களின் அடையாளம்!

உங்க தாத்தா, பாட்டி கையில் பாருங்க, இந்த தழும்பு இருக்கும். ஆதார் கார்டுக்கு முன், இந்தியர் என்பதற்கு அடையாளம் என்று சொல்லும் அளவிற்கு அனைத்து இந்தியர்களின் கையிலும் இத்தழும்பு இருந்தது. பெரியம்மையை தடுக்க போடப்பட்ட தடுப்பூசியால் உண்டாகும் தழும்பு இது. 1980-களின் பிற்பகுதி வரை போடப்பட்ட இந்த தடுப்பூசி, சொட்டு மருந்து வருகைக்கு பிறகு நிறுத்தப்பட்டது. உங்க வீட்டில் யாருக்காவது இந்த தழும்பு இருக்கா?
News February 12, 2026
அமைச்சர்களின் தொகுதிகளை கேட்கும் கம்யூனிஸ்டுகள்?

KN நேருவின் திருச்சி மேற்கு தொகுதியையும், அன்பில் மகேஸின் திருவெறும்பூர் தொகுதியையும் திமுகவிடம் கம்யூனிஸ்டு கட்சிகள் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த 2 தொகுதியிலும், கிளை அமைப்பு வரை கட்சி வலுவாக இருப்பதாக 2 கட்சிகளும் கருதுகிறதாம். ஏற்கெனவே, கேட்கும் தொகுதிகளை கொடுக்கமாட்டோம் என திமுக நிர்ப்பந்திப்பதாக கூறப்படும் நிலையில், கம்யூனிஸ்டுகளுக்கு இந்த தொகுதிகள் ஒதுக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.


