News March 16, 2025
2002 குஜராத் கலவரம்… மனம் திறந்தார் மோடி

2002 குஜராத் கலவரம் குறித்து PM மோடி மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். 2002க்கு முன்பு 250க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடைபெற்று இருப்பதாகவும், ஆனால் 2002 கலவரம் மிகைப்படுத்தி பொய் பிரசாரம் செய்யப்பட்டது, நீதிமன்ற தீர்ப்பால் தன்மீதான களங்கம் நீங்கியது என்றும் கூறியுள்ளார். 2002க்கு பிறகு குஜராத்தில் கலவரம் நடக்கவில்லை, தமது நிர்வாகம் அமைதியை நிலை நிறுத்தியது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News July 11, 2025
பெண்ணின் வாக்காளர் அட்டையில் நிதிஷ் புகைப்படம்

பீகாரில் பெண்ணின் வாக்காளர் அடையாள அட்டையில் CM நிதிஷ் குமாரின் புகைப்படம் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை திருத்தத்தில் முகவரி மாற்றத்திற்கு மாதேபுராவை சேர்ந்த அபிலசா குமாரி விண்ணப்பித்துள்ளார். அதன்படி, முகவரி மாற்றப்பட்ட நிலையில், அபிலசாவுக்கு பதிலாக நிதிஷின் படம் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
News July 11, 2025
ராசி பலன்கள் (11.07.2025)

➤ மேஷம் – நிம்மதி ➤ ரிஷபம் – ஓய்வு ➤ மிதுனம் – ஜெயம் ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – வெற்றி ➤ கன்னி – நன்மை ➤ துலாம் – பகை ➤ விருச்சிகம் – ஜெயம் ➤ தனுசு – மறதி ➤ மகரம் – தோல்வி ➤ கும்பம் – அசதி ➤ மீனம் – வரவு.
News July 11, 2025
28 மாவட்டங்களில் நள்ளிரவு மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் இரவு ஒரு மணி வரை 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம், திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, சென்னை, கிருஷ்ணகிரி, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, மதுரை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாம்.