News May 14, 2024
20,000 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி: கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கலையரங்கத்தில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் பேசிய ஆட்சியர் ஷ்ரவன்குமார், தைவான் நாட்டின் பவுசென் குழுமத்தைச் சேர்ந்த ‘ஹை க்ளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் உளுந்துார்பேட்டையில் விரைவில் செயல்பட உள்ளது. இந்நிறுவனத்தினால் இப்பகுதியில் உள்ள 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது என்றார்.
Similar News
News July 8, 2025
தகவல் கையேடுகளை வழங்கும் பணிகள் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டமான, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் (07.07.2025) திங்கள் கிழமை கள்ளக்குறிச்சி நகராட்சி 20வது வார்டு பகுதியில் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News July 7, 2025
தகவல் கையேடு வழங்கும் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி நகராட்சி, 20வது வார்டு ஏமப்பேர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (07.07.2025) தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
News July 7, 2025
திருமண தடை நீக்கும் பச்சையம்மன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொணலவாடி கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயில், சுற்றுவட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு வந்து பச்சையம்மனை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஷேர் பண்ணுங்க…