News March 27, 2025
2000 அமெரிக்க விசா Appointments ரத்து!

விதிகளை மீறி விண்ணப்பிக்கப்பட்டிருந்த 2000 விசாக்களுக்கான Appointments-களை அமெரிக்க தூதரகம் ரத்து செய்துள்ளது. இதுபோன்ற மோசடிகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தெரிவித்த அமெரிக்க தூதரகம் இனிமேல் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தவறான வழிகளில் விசாவுக்கான Appointments பெறுபவர்களின் கணக்குகள் முடக்கப்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 30, 2025
ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் புற்றுநோய்.. KV-இல் தடை

மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி வெளியிட்ட பதிவில், ஆஸ்பெஸ்டாஸ் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என 65-க்கும் மேற்பட்ட நாடுகள் தடை விதித்துள்ளதாக கூறியுள்ளார். அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் புதிய கட்டுமானம் அல்லது புதுப்பித்தலில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News March 30, 2025
நாளை விடுமுறை இல்லை.. எல்ஐசி ப்ரீமியம் கட்டலாம்

இன்று (மார்ச் 30) ஞாயிறு விடுமுறை தினம். அதேபோல், நாளை (மார்ச் 31) ரமலான் பொது விடுமுறை. ஆனால் நிதி ஆண்டு நிறைவையொட்டி, இன்றும், நாளையும் நாடு முழுவதும் எல்ஐசி கிளை அலுவலகங்கள் திறந்திருக்கும் என்றும், ஆதலால் இன்றும், நாளையும் வாடிக்கையாளர்கள் எந்த சிரமமும் இன்றி எல்ஐசி அலுவலகங்களில் ப்ரீமியம் கட்டலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
News March 30, 2025
பழைய ஸ்டார்க் தெரியுமா? வீரனுக்கு சாவே இல்லை..

ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் தன் வேகத்தாலும், ஸ்விங் பவுலிங்காலும் எதிர் அணியை மிரள வைப்பதில் வல்லவர். காயம், பார்ம் அவுட் போன்ற காரணங்களால் சமீப காலமாக ஸ்டார்க் பழையபடி விளையாடவில்லை. ஆனால் இன்றைய IPL ஆட்டத்தில் ஸ்டார்க்கை பழைய வெறியுடன் காண முடிந்தது. SRHக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தான் யார் என்பதை மீண்டும் உலகறிய செய்தார். பர்ப்பிள் கேப்பையும் வென்றார்.