News January 11, 2025

2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு

image

பாளையங்கோட்டை ராஜா கோபாலபுரத்தை சேர்ந்தவர் மாணவி அனுஷா. இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது வீட்டின் அருகே ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் இடத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை களம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார், இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவி அனுஷாவை நேற்று பாராட்டியுள்ளார்.

Similar News

News February 12, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.11) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வந்த அன்டோ ஆரோக்கியராஜ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News February 11, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.11) இரவு ரோந்து பணிகளில் இளவரசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News February 11, 2026

மேலப்பாளையத்தில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

image

நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில்
சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும்
செயல்களில் ஈடுபட்டு வந்த மேலப்பாளையத்தை சேர்ந்த பேச்சி மகன் முத்துராம் (19) என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை துணை ஆணையர்கள் பரிந்துரைத்தனர். எனவே ஆணையர் மணிவண்ணப் ஆணைப்படி முத்துராம் இன்று குண்டர் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!