News November 13, 2024

2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் அமைச்சர்

image

ஆண்டுதோறும் பழங்குடியினர் நல தினம் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வரும் 15ஆம் தேதி கரியலூர் கோடை விழா அரங்கில் பழங்குடியினர் நல தினம் கொண்டாடப்படுகிறது. இதில் பழங்குடியினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவாணன் கலந்து கொண்டு 2000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

Similar News

News November 19, 2024

குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

image

சங்கராபுரம் ஒன்றியத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 0-6 மாத குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் சங்கராபுரத்தில் இன்று வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர், பேரூராட்சி தலைவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கலந்து கொண்டனர்.

News November 19, 2024

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் பயனாளிகளின் விபரங்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் இருப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

News November 19, 2024

 கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியர் அறிவிப்பு 

image

 கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவகள் 2024-25ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற தங்கள் அருகாமையில் உள்ள இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் சான்று கல்விச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் www.tnesevai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி  ஆட்சியர் அறிவித்துள்ளார்.