News June 12, 2024
சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளை வெல்ல வேண்டும்

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளை வென்றது போல், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் 200+ தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில், வாக்குகளின் அடிப்படையில் 221 சட்டமன்றத் தொகுதிகளில் INDIA கூட்டணி முன்னிலை வகித்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், இடைத் தேர்தலை வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News March 26, 2026
மதுரையில் தொழிலாளி வெட்டிக் கொலை

தத்தனேரி கண்மாய்க்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வம்(46). சுமைத் தூக்கும் தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள மயானத்தில் வேலை செய்பவா்களுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாள்களாக மயானத்திலேயே அவா் தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் செல்வம் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்ட மயான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 26, 2026
திமுகவுக்கான பொறுப்பை சுட்டிக்காட்டிய திருமா

கொள்கை பகையை வீழ்த்தி, கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்வது தங்களது கடமை என்றாலும், கூட்டணி கட்சிகளின் நலனையும் கருத்தில் கொள்வது தலைமையின் பொறுப்பு என திமுகவுக்கு <<19474288>>திருமாவளவன்<<>> சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் தோழமை கட்சிகளின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே ஜனநாயகம் எனவும் தெரிவித்துள்ளார். திருமாவின் கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
EV ஸ்கூட்டர் விலை ₹5,000 குறைந்தது!

டாடா, மாருதி, மஹிந்திரா உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் மார்ச் மாத சலுகைகளை அறிவித்துள்ளன. அந்த வரிசையில், பஜாஜ் நிறுவனம் தனது சேட்டக் EV ஸ்கூட்டருக்கு ₹5,000 ஆஃபர் அறிவித்துள்ளது. அந்த வகையில் 35 சீரிஸ் 153 KM வகை ஸ்கூட்டர் ₹1,09,605, 30 சீரிஸ் 127 KM வகை ஸ்கூட்டர் ₹96,000, 25 சீரிஸ் 113 KM வகை ஸ்கூட்டர் ₹87,100 என விலை குறைந்துள்ளது. ஸ்கூட்டர் வாங்கும் திட்டம் இருந்தால் பயன்படுத்திக்கோங்க.


