News November 16, 2025

200 ரன்கள் அடித்தாலும் அப்பாவுக்கு போதாது: வைபவ்

image

நேற்று நடந்த UAE-க்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் சதம் அடித்து <<18287956>>வைபவ் சூர்யவன்ஷி<<>> சாதனை படைத்திருந்தார். இந்நிலையில், 200 ரன்களை அடித்தாலும் எனது அப்பா திருப்தி அடையமாட்டார் என அவர் தெரிவித்துள்ளார். கூடுதலாக 10 ரன்களை அடித்திருக்கலாமே என்றுதான் அப்பா கேட்பார். ஆனால், நான் சதம் அடித்தாலும் சரி டக் அவுட் ஆனாலும் சரி, அம்மா எப்போதும் போல், மகிழ்ச்சியுடனே இருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 9, 2026

விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

வார இறுதி, தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி, மக்கள் ஊர்களுக்கு செல்ல, நாளை (ஏப்.10) முதல் 5 நாள்களுக்கு சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலாக 2,119 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். <>TNSTC இணையதளம்<<>> (அ) செயலியில் இப்போதே டிக்கெட் புக் செய்து உங்கள் பயணத்தை ஈசியாக்குங்கள். SHARE IT

News April 9, 2026

தவெக மீது ஒரே நாளில் 12 வழக்குகள்

image

தூத்துக்குடியில் விஜய் நேற்று பிரசாரம் செய்தபோது பல விதிகளை மீறியதாக அவர் உள்பட நிர்வாகிகள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றது, அனுமதிக்கப்படாத இடங்களில் கட்சி கொடி பயன்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக வழக்குகள் பதிவாகியுள்ளன. ஏற்கெனவே பெரம்பூரில் பிரசாரத்தில் விஜய் விதி மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.

News April 9, 2026

கோடை மழை.. 12 மாவட்டங்களில் அலர்ட்

image

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்தாலும், ஏப்.15 வரை மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறதாம். குறிப்பாக, இன்று குமரி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் அடுத்த 1 வாரத்திற்கு குடையை மறக்காதீங்க! SHARE IT

error: Content is protected !!