News August 4, 2025

200 பயனாளிகள் 1.98 கோடி மதிப்பிலான நல உதவிகள்!

image

சேலம் அரசு பொருட்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்கள் சாமிநாதன், ராஜேந்திரன், ஆகியோர் அரசின் சார்பில் பயனாளிகளுக்கு நல உதவிகளை இன்று வழங்கினார். இதில் மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மகளிர் உரிமைததொகை, சமூக நலன் தாட்கோ, உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 200 பயனாளிகளுக்கு ரூபாய் 1.98 கோடி மதிப்பிலான நல உதவிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News November 13, 2025

சேலம்: உள்ளூரில் சூப்பர் வேலை.. அரிய வாய்ப்பு!

image

சேலம் அயோத்திபட்டினத்தில் செயல்பட்டு வரும் Sri krishnav electronic and mobile நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் தலா ஒரு Front sales officer பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை மற்றும் ஏதேனும் விற்பனை அனுபவம் ஆகியவை இருப்பது அவசியம். சம்பளம் ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு +2 முதல் டிகிரி படித்த 25 வயது நிரம்பியவர்கள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 13, 2025

சேலம்: ரூபாய் 2 கோடி அபராதம் வசூல்!

image

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் டிக்கெட் இன்றி பயணம் செய்த 15,512 பேரிடம் இருந்து ரூபாய் 1.43 கோடி, முறையான டிக்கெட் இன்றி பயணித்த 10,173 பேரிடம் ரூபாய் 66 லட்சம், கூடுதல் லக்கேஜ் எடுத்துச் சென்ற 81 பயணிகளிடம் ரூபாய் 50,179 என மொத்தம் ரூபாய் 2.09 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

News November 13, 2025

சேலம்: தனி மனையாக வாங்கியவர்கள் கவனத்திற்கு

image

சேலம் மாவட்டத்தில் தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் www.onlineppa.tn.gov.in இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படா மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக 30/11/2025 வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.SHAREit

error: Content is protected !!