News April 10, 2024

200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில், 200 சிறப்பு பேருந்துகள் இன்று முதல்
ஏப்ரல் 15ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், இணையதளம் மற்றும் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 29, 2025

சேலத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை!

image

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா கூறினார். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா? என உளவுப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் போலீஸ் சரகத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை. முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

சிறுவர் கொலை வழக்கு: தாய் பரபரப்பு வாக்குமூலம்!

image

வாழப்பாடியை,துக்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி இளவரசி. இவர்களது மகன்களான விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) ஆகிய இருவரும் நேற்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளார். இளவரசியை போலீசார் கைது செய்தனர்.

News April 29, 2025

கோவை-தன்பாத் ரெயில் இன்று தாமதமாக புறப்படுமென அறிவிப்பு

image

வாராந்திர கோவை-தன்பாத் சிறப்பு ரயில் (03680) இன்று (செவ்வாய்க்கிழமை) 8 மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக, கோவையில் இருந்து காலை 7.50 மணிக்கு பதிலாக மாலை 4.15 மணிக்கு புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இணைப்பு ரயில் தாமதம் காரணமாக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக தன்பாத் செல்கிறது.

error: Content is protected !!