News August 25, 2024
200 கிலோ வெடிமருந்து பதுக்கிய பெண் கைது

கடலூர் டி.எஸ்.பி. பிரபு மற்றும் போலீசார் நொச்சி காடு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பட்டாசுகள் தயாரிக்க உரிய அனுமதியின்றி 200 கிலோ வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (38), அவரது தாய் ஞான சௌந்தரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து ஞான சௌந்தரியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரமேசை தேடி வருகின்றனர்.
Similar News
News October 22, 2025
கடலூர்: இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க
News October 22, 2025
கடலூர் மாவட்டத்தில் 2248.7 மி.மீ மழை பதிவு!

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 22) காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் 179.8 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 176.8 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 166 மில்லி மீட்டர், வானமாதேவி 165 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 154 மில்லி மீட்டர், சேத்தியாத்தோப்பு 130 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 2248.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News October 22, 2025
கடலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ‘1077’, ‘04142-220 700’ ஆகிய எண்கள் மூலமாக மழை, வெள்ள மற்றும் அவசர உதவிக்கு கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE