News February 26, 2025

தவெக விழாவில் 20 வகையான கமகமக்கும் விருந்து!

image

த.வெ.க.வின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா, பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கமகம விருந்து தயாராகி வருகிறது. அதில், கேரட் அல்வா, வடை, காலிப்பிளவர் 65, பூரி, பட்டானி குருமா, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், கதம்ப சாம்பார், ரசம், வெண்ணிலா ஐஸ்கிரீம், தயிர், பீன்ஸ் பருப்பு உசிலி, மோர், அப்பளம், வாழைப்பழம், ஊறுகாய், தண்ணிர் பாட்டில், அடைப் பிரதமம் ஆகியவை மொத்த மாமல்லபுரத்தையே மணமணக்க செய்துள்ளது.

Similar News

News February 26, 2025

திருமணம் செஞ்சிக்க ஆசை.. பிரபல நடிகை ஓப்பன் டாக்

image

திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ள முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் (49), அதற்கு சரியான பாட்னரைக் கண்டுபிடிப்பது முக்கியமானது என தெரிவித்தார். ஆனால் அது எளிதான விஷயமாக இருக்காது எனக் கூறி, தனது திருமணம் 2 இதயங்களின் சங்கமமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். நடிகர் ரோமான் ஷாவ்லை 3 ஆண்டுகளாக டேட்டிங் செய்த சுஷ்மிதா, அதன் பிறகு, லலித் மோடியையும் காதலித்து வந்தார்.

News February 26, 2025

ஒரு எம்பி தொகுதி கூட குறையாது: அமித் ஷா

image

தமிழ்நாட்டில் ஒரு எம்பி தொகுதி கூட குறையாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த பாஜக விழாவில் பங்கேற்று பேசிய அவர், தமிழக முதல்வரும், அவரது மகனும் தேடித் தேடி இல்லாத பிரச்னையை உருவாக்குகின்றனர் என சாடினார். தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகள் குறையும் என்பது கற்பனை என்றும் எந்த மாநிலத்திற்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது என்றும் கூறினார்.

News February 26, 2025

அமெரிக்காவின் கதாநாயகன் காலமானார்

image

USA அதிபராக இருந்த ஜான் எப்.கென்னடி 1963இல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி, உளவுத்துறை அதிகாரியாக இருந்த கில்லால் காப்பாற்றப்பட்டார். கென்னடியை காப்பாற்ற முயன்றபோது கில், துப்பாக்கித் தோட்டா பாய்ந்து காயமடைந்தார். அவரது இந்த துணிச்சலால், அமெரிக்க மக்களால் கதாநாயகனாக பார்க்கப்பட்டார். இந்நிலையில், கலிபோர்னியாவில் வசித்து வந்த ஹில் (93) காலமானதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!