News February 10, 2026
20 வயதில் திருட்டு.. 60 வயதில் அரெஸ்ட்டு!

ம.பி.,யில் 60 வயது முதியவரை திடீரென போலீசார் கைது செய்துள்ளனர். என்ன குற்றம் என விசாரித்தவர்களுக்கு கிடைத்த பதில்தான் பேரதிர்ச்சி. 1980-ம் ஆண்டில் அவர் 20 வயது இளைஞராக இருந்தபோது, 7 பேருடன் சேர்ந்து ₹100 மதிப்பிலான கோதுமையை திருடியுள்ளார். 45 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த அந்த வழக்கில்தான் தற்போது அவர் கைதாகியுள்ளாராம். நல்லா இருக்குயா உங்க டக்கு என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Similar News
News February 17, 2026
நகைக்கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சி செய்தி

கூட்டுறவு வங்கிகளில் 2021, மார்ச் 31-க்கு முன் பெறப்பட்ட ₹4,889 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் இது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 13.12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். வரும் தேர்தல் அறிக்கையிலும் நகைக்கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.
News February 17, 2026
OPS ஆதரவாளர்கள் கூண்டோடு விலகல்

கூட்டணி முடிவை இதுவரை OPS அறிவிக்காததால், நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறும் படலங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இரஞ்சித் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளனர். அவர்கள் விரைவில் EPS-ஐ நேரில் சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News February 17, 2026
பணமழை கொட்டும் 4 ராசிகள்

ஏற்கெனவே சுக்கிரன் குடிகொண்டுள்ள கும்ப ராசியில் சூரியனும் நுழைவதால் சுக்கிராதித்ய யோகம் உண்டாகிறது. இதனால் மேஷம், ரிஷபம், கன்னி, தனுசு ராசிக்காரர்களின் நிதிநிலைமை மேம்படும். புதிதாக மனை (அ) கார் வாங்கும் அதிர்ஷ்டம் கூடிவரும். தொழில் & வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதேபோல், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றிப் படிக்கட்டில் ஏற நிறைய வாய்ப்புள்ளது. SHARE


