News December 15, 2025
20-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் நேற்று பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருந்ததாக IMD தெரிவித்துள்ளது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் டிச.20-ம் தேதி வரை TN மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும், இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கும் எனவும் IMD கூறியுள்ளது.
Similar News
News December 19, 2025
விலை ₹11,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

பைக் வாங்க போறீங்களா? இந்த டிசம்பர் மாதத்தில், பல்வேறு பைக்குகளுக்கு ஆண்டு இறுதி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ₹11,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் பைக்குகளுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 19, 2025
5 நிமிடம் வாக்கிங்… இவ்வளவு நன்மைகள் இருக்கு!

தினமும் நடைபயிற்சி செய்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால், அதற்கு நேரமில்லாதவர்கள் அலுவலகத்தில் கூட ட்ரை பண்ணலாம். ஆம், நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்காராமல், 1 hrs-க்கு ஒருமுறை சுமார் 5 mins நடக்கவேண்டும். அப்படி செய்தால், *மெட்டபாலிசம் மேம்பட்டு கொழுப்பு சேராமல் தடுக்கலாம் *ரத்த ஓட்டம் மேம்படும் *சோர்வு நீங்கி, ஆற்றல் அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
News December 19, 2025
பள்ளி மாணவி கர்ப்பம்.. அதிரடி தண்டனை

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கொடூரனுக்கு, தேனி போக்சோ கோர்ட் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2020 முதல் மாணவியை காதலித்து வந்த இளைஞருக்கு 2022-ல் வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. இருப்பினும், பெற்றோரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளான். அதில் மாணவி கர்ப்பமாக, அந்த நிலையிலும் பலாத்காரம் செய்திருக்கிறான் இந்த கொடூரன். இவனை என்ன செய்வது?


