News August 15, 2025
20 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கல்

மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ₹1,33,800 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
Similar News
News April 6, 2026
CM ஸ்டாலின் நாளை மாயவரம் வருகிறார்!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீர்காழியில் நாளை(ஏப்.7) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளார். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
News April 6, 2026
மாயவரம்: வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். அதன்படி பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பொது இடங்களில் நிறுத்தி செல்லும்போது, அதில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பைக் டேங்க் கவர்களில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைத்து செல்ல வேண்டாம். அவற்றை மற்றவர்கள் திருடி செல்ல வாய்ப்புள்ளதால் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்
News April 6, 2026
மாயவரம்: ரூ.62,300 பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை

சீர்காழி அருகே செம்மங்குடி – திருக்கருகாவூர் சாலையில் பறக்கும் படை அலுவலர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை சோதனை செய்ததில், ராதாநல்லூரைச் சேர்ந்த விஷ்ணுகுமார் என்பவர், ரூ.64,300 உரிய ஆவணமின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து பணத்தை முறிதல் செய்த பறக்கும் படையினர், சீர்காழி மண்ட தாசில்தார் பாபுவிடம் ஒப்படைத்தனர்.


