News March 29, 2024
20 வேட்புமனு நிராகரிப்பு

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., பாஜக, நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 21 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் உரிய ஆவணம் இல்லாதது, முறையாக படிவம் பூர்த்தி செய்யாத 20 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
Similar News
News September 18, 2025
மதுரையில் புதிதாக 19 ஓட்டுச்சாவடிகள்

மதுரையில் தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. அதில் கலெக்டர் பேசுகையில், ”1200க்கு மேல் வாக்காளர் உள்ள 300க்கும் மேலான ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட உள்ளன. மேலும் தேவையானதாக திருமங்கலம் தொகுதியில் 6, திருப்பரங்குன்றத்தில் 3, மதுரை கிழக்கில் 3, உசிலம்பட்டியில் 4 உட்பட மொத்தம் 19 புதிதாகவே ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன”என்றார்.
News September 18, 2025
மதுரையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நாளை செப்.19 காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயத்தை சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
மதுரை: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய<