News August 14, 2024
20 துணை வட்டாட்சியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் துணை வட்டாட்சியர்கள் பலர், நீதிமன்றம் மற்றும் காவல் துறை பணிகளுக்கு பயிற்சிப் பெற்று 6 ஆண்டுகளாக வட்டாட்சியர் பதவிக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு வெளி மாவட்ட வட்டாட்சியர்களை நியமித்து வரப்படுகிறது. இதனை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து துணை வட்டாட்சியர்கள் 20 பேர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்.
▶<
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 1/2

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். பாலிசி குறித்து தெரிந்து கொள்ள காஞ்சிபுரம் அதிகாரிகளை (044-27222901, 044-27224600) தொடர்பு கொள்ளுங்கள். <<17027973>>தொடர்ச்சி<<>>
News July 11, 2025
சித்தியை கொடூரமாக வெட்டி கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் அடுத்த நல்லூரில் சமாதானம் செய்வதற்காக சென்ற சித்தியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. அண்ணன் – தம்பி இடையிலான இடப்பிரச்சனையில், சித்தி சுமதி சமாதானம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மகன் உறவு கொண்ட துரை என்பவர் சுமதியின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.