News October 14, 2025

எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

image

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு 7 மணி அளவில் ஜம்மு காஷ்மீர், மச்சில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஊடுருவலை முறியடித்தனர். பனிப்பொழிவை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News October 14, 2025

அதிமுக MLA-க்களுடன் EPS முக்கிய ஆலோசனை!

image

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதிமுக MLA-க்களுடன் பேரவை வளாகத்தில் EPS ஆலோசனை நடத்தினார். இதில், கரூர் துயர சம்பவம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அதிமுக சார்பில் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ள 3 நாள்களில் எழுப்ப வேண்டிய மக்கள் பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2025

”ரசிகர்கள் பாதுகாப்பில் அஜித்துக்கு அக்கறை”

image

எந்தவொரு விஷயத்திலும், முடிவெடுப்பதில் அஜித் தான் கிங் என்று பார்த்திபன் கூறியுள்ளார். சினிமா புகழையும், ரசிக கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர் அஜித் என்று X-ல் அவர் பதிவிட்டுள்ளார். தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்ட காரணத்தினால் தான், அவர் பட ப்ரொமோஷனுக்கு கூட வருவதில்லை என்றும் பார்த்திபன் பேசியுள்ளார்.

News October 14, 2025

பைக்/ காரில் டேங்க் ஃபுல் பண்ற பழக்கம் இருக்கா.. உஷார்!

image

டேங்க் ஃபுல் செய்வதால் வண்டியே வெடிக்கலாம் என்பது தெரியுமா? டேங்கில் ‘Cut off level’ என்பது இருக்கும். அதுவரை மட்டுமே எரிபொருள் நிரப்பணும். டேங்கை மூடிய பிறகு, வெப்பநிலை அதிகரிப்பதால், எரிபொருள் விரிவடையும். அதற்காக ‘Cut off level’ கொடுக்கப்படுகிறது. டேங்க் நிரம்பி இருந்தால், எரிபொருள் வழிந்து Evaporating சிஸ்டமில் பிரச்னை உருவாகி, Spark வந்தால், வண்டி வெடிக்கும் சூழலும் ஏற்படலாம். கவனமா இருங்க!

error: Content is protected !!