News March 28, 2025
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு – காஷ்மீரில் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் 5 பேர் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 3 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்தனர். காயமடைந்த 5 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News September 15, 2025
2nd Hand Phone வாங்குறீங்களா? இத செக் பண்ணுங்க

2nd Hand போன் வாங்கும்போது அது திருட்டு போனாக இருக்குமோ என்ற சந்தேகம் வரும். அந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள இந்த ஈஸியான முறையை செய்துபாருங்கள். ▶முதலில் *#06# என டயல் செய்வது IMEI எண்ணை குறித்துக்கொள்ளுங்க ▶Messages-க்கு சென்று KYM என எழுதி IMEI நம்பரை டைப் செய்து அதை 14422 நம்பருக்கு SMS அனுப்புங்கள் ▶உங்கள் ஃபோன் Blacklisted என SMS வந்தால் அது திருட்டு ஃபோன் என அர்த்தம். SHARE.
News September 15, 2025
EPS முடிவுக்காக காத்திருக்கும் செங்கோட்டையன்

நாளை டெல்லிக்கு செல்லும் EPS, பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். இதில், அதிமுக இணைப்பு குறித்து பேசப்படும் என தெரிகிறது. இதன் காரணமாகதான், இன்று செங்கோட்டையன் வேறு எந்த தடாலடியான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், டெல்லி சந்திப்புக்கு பின், EPS பேசப்போகும் கருத்தின் அடிப்படையில், அடுத்தகட்ட முடிவை அவர் எடுப்பார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News September 15, 2025
இன்று முதல் ₹10 லட்சம்.. அமலுக்கு வந்தது

UPI மூலம் பொருள்கள், சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனைக்கான Person-to-Merchant வரம்பு இன்று (செப்.15) முதல் ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பங்குச்சந்தை முதலீடு, இன்சூரன்ஸ் பிரீமியம், கடன் தவணை உள்ளிட்டவை ₹2 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், தனிநபர் தனது வங்கிக் கணக்கில் இருந்து வேறொருவருக்கு அனுப்பும் லிமிட் ₹1 லட்சமாகவே தொடர்வதாக NCPI தெரிவித்துள்ளது.