News August 28, 2025

ஜம்முவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

image

இன்று அதிகாலையிலேயே நடந்த தீவிரவாத தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு & காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் ராணுவத்தினர் மற்றும் அம்மாநில போலீஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 28, 2025

பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்

image

நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. மேலும், மதுரை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பூர், விருதுநகர், பெரம்பலூர், தஞ்சை, திருவள்ளூர், வேலூர், திருப்பூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், மழையின்போது பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

News August 28, 2025

மாணவர்கள் இனி ஃபோன் பயன்படுத்த தடை

image

தென்கொரியாவில் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றில் சிக்குவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 2026 முதல் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்திலும், பள்ளியில் இருந்து வந்தவுடன் மாணவர்கள் செல்போனே கதி என இருக்கின்றனர். இதனை அரசு எப்படி கையாளலாம்? கமண்ட்ல சொல்லுங்க.

News August 28, 2025

₹45,000 சம்பளத்துடன் ரயில்வேயில் வேலை

image

ரயில்வேயில் காலியாகவுள்ள 368 Section Controller பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 33. தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ தேர்வு. சம்பளம்: ₹45,000. இதற்கான விண்ணப்பப்பதிவு செப்.15-ல் தொடங்கி, அக்.14 உடன் நிறைவடைகிறது. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

error: Content is protected !!