News September 12, 2025
மகளிர் உலகக் கோப்பையில் 2 தமிழச்சிகள்

மகளிர் ODI உலகக் கோப்பை தொடர், செப்.30-ல் தொடங்குகிறது. முதல்முறையாக இந்த மகளிர் கிரிக்கெட் WC தொடரில் மகளிர் மட்டுமே அம்பயர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தமிழர்கள் ஆவர். இந்தியா சார்பில் விருந்தா ரதியுடன் N ஜனனி, காயத்ரி வேணுகோபாலன் ஆகிய தமிழர்களும் கள மற்றும் டிவி நடுவர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்கள் பல சர்வதேச போட்டிகளிலும் நடுவர்களாகவும் இருந்துள்ளனர்.
Similar News
News September 12, 2025
ரேஷன் கார்டு அப்டேட்.. உடனே இதை பண்ணுங்க

சென்னை, திருப்பத்தூர், நாமக்கல், திருவள்ளூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நாளை முதல் தொடங்குகின்றன. அதில், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காணப்படும். மேலும், ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்யாதவர்கள் செப்.25-க்குள் பதிவு செய்து கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க மக்களே! SHARE IT.
News September 12, 2025
தேர்தல் செலவில் டாப் 2-வில் திமுக

2024 தேர்தல் செலவு குறித்த அறிக்கையை ADR வெளியிட்டுள்ளது. DMK ₹170 கோடியும், ADMK ₹5.7 கோடியும் செலவிட்டுள்ளது. நாட்டிலேயே அதிகம் செலவிட்ட 2-வது மாநில கட்சி DMK ஆகும். முதலிடத்தில் சந்திரசேகர் ராவின் BRS (₹197 கோடி) கட்சி உள்ளது. அதேநேரம், இந்த செலவுகளில் முதற்கட்ட தலைவர்களின் சுற்றுப்பயணம், போஸ்டர்ஸ், நட்சத்திர பேச்சாளர்கள், வாகனங்கள், உணவு போன்றவையும் அடங்கும்.
News September 12, 2025
ஸ்டாலின் குடும்பத்தில் மரணம்.. தலைவர்கள் இறுதி அஞ்சலி

CM ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் <<17674558>>தந்தை வேதமூர்த்தியின்<<>> உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் சற்றுமுன் தகனம் செய்யப்பட்டது. நேற்று மாலை கொட்டிவாக்கம் AGS காலனியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய CM ஸ்டாலின் இன்று மயானத்திற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும், DCM உதயநிதி, கனிமொழி, அமைச்சர்கள், வீரமணி, கமல்ஹாசன் வைகோ, திருமா உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.