News October 18, 2025

ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்!

image

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24-ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 21-ம் தேதியே உருவாகிறது என IMD தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தென் கிழக்கு அரபிக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால் வங்கக்கடல், அரபிக்கடலில் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியை சந்திக்கும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 18, 2025

பங்கு சந்தையில் AI அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!

image

AI துறையில் உள்ள நிறுவன பங்குகளின் விலை மிக அதிகமாக ஏறுவதால், உலக பங்கு சந்தையில் விரைவில் ஒரு பெரிய சரிவு வரலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சில Tech நிறுவன பங்குகள் அதிக மதிப்பில் இருப்பது, சந்தை சில நிறுவனங்களை சார்ந்து இயங்குவது, ஆட்டோமேட்டிக் வர்த்தகம் வணிகத்தை வீழ்ச்சியடைய செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பல துறைகளில் முதலீடு செய்ய அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News October 18, 2025

சற்றுமுன்: விலை தாறுமாறாக மாறியது

image

தீபாவளியையொட்டி, கோயம்பேடு, தோவாளை, மாட்டுத்தாவணி உள்ளிட்ட மலர்ச் சந்தைகளில் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகைப்பூ ₹2,500, கனகாம்பரம் ₹2,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முல்லை, காக்கரட்டான் ஆகியவை ₹1,500-க்கும், பிச்சி பூ ₹1,200-க்கும் விற்கப்படுகிறது. தீபாவளிக்கு பிறகே விலை சரியும் வணிகர்கள் கூறுகின்றனர். தங்கம் மட்டுமல்ல, பூக்கள் கூட வாங்க முடியாது போலயே..!

News October 18, 2025

இன்று தங்கம் வாங்க உகந்த நேரம் எது?

image

தீபாவளியின் தொடக்கத்தை குறிக்கும் தந்தேராஸ் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆயுர்வேத கடவுளான தன்வந்திரியை வழிபடும் இந்நாளில் தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் வாங்கினால் வீட்டில் செல்வம் தொடர்ந்து பெருகும் என்று நம்பப்படுகிறது. அதன்படி, இன்று நீங்கள் தங்கம் வாங்க விரும்பினால், இரவு 7.28 மணி முதல் 8.38 மணி வரை நகை வாங்குவது சிறப்பாகும். நீங்க எத்தனை சவரன் வாங்க போறீங்க?

error: Content is protected !!