News November 24, 2024
சிஎஸ்கே வாங்கிய 2 வீரர்கள்

ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே முதல் வீரராக NZ வீரர் டெவோன் கான்வேயை மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ. 2 கோடி Base Price இருந்த அவரை கடும் போட்டிக்கு நடுவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 6.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதைப்போல இந்திய பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதியை ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
Similar News
News October 27, 2025
கர்நாடகாவில் இனி 30 மார்க் எடுத்தால் பாஸ்

கர்நாடகாவில் SSLC, PUC-க்கான தேர்ச்சி சதவீதத்தை 35%-லிருந்து 33% ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, SSLC-ல் 206/625 மதிப்பெண்களும், PUC-ல் 198/600 மதிப்பெண்களும் (ஒரு பாடத்தில் 30 மார்க் எடுக்க வேண்டும்) எடுத்தால் பாஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்கலாமா? அவ்வாறு குறைத்தால் எவ்வளவு குறைக்கலாம் என்று கமெண்ட் பண்ணுங்க.
News October 27, 2025
கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்

பிரபல கவிஞரும், நடிகருமான சினேகனின் தந்தை சிவசங்கு(102) காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் புது காரியாபட்டியில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் தனது இரட்டை குழந்தைகளை தந்தையிடம் கொடுத்து வாழ்த்து பெற்ற நெகிழ்ச்சி வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். சினேகனுக்கு திரைத்துறையினர் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். #RIP
News October 27, 2025
திராவிட கட்சிகள் தனித்து களமிறங்க தயங்குவது ஏன்?

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான DMK, பிரதான எதிர்க்கட்சியான ADMK தங்களது கூட்டணியை பலப்படுத்தி வருகின்றன. 1967-க்கு பிறகு இரு பெரும் திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமருகின்றன. ஆனால், தேர்தலில் தனித்து போட்டியிட தயங்குவது ஏன் என சீமான் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.


